இப்படியும் நடக்கிறது

0
94

இந்த வாரத்தின் எஞ்சிய சில நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாகக் கடந்து செல்லவிருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிக்கை ஒன்று இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் நடந்துவந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுகள் தொடர்பாக வெளியாகவுள்ள அந்த அறிக்கை இலங்கைக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கைக்கு சர்வதேச ரீதியில் ஊடகங்க ளில் கிடைக்கும் முக்கியத்துவம் நாட்டுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த மகிழ்ச்சியான செய்தியு டன் நாளையதினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்க அந்த உரையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவிருப்பது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், தினசரி அரசியல் அதிர்வுகள் காத்திருக்கின்றன என்கின்றது தெற்கு ஊடக வட்டாரம் ஒன்று. எதிர்வரும் இருபத்தியெட்டாம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார் ஷல் சரத் பொன்சேகாவின் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தாமரைத்தடாக உள்ளக அரங்கில் நடைபெற விருக்கின்றது.

அந்த விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந் துகொள்ளவிருக்கிறார். அந்த விழாவில் சரத் பொன்சேகா தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, அவர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தமையும் அதனையடுத்து அவரை கட்சியிலிருந்து வெளியேற்றவேண் டும் என்று ஐக்கிய மக்கள் சக் தியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தியிருந்ததும் வாசகர்கள் அறிந்தவைதான். இந் நிலையிலேயே அவர், குறித்த நூல் வெளியீட்டு விழாவில் தான் கட்சி மாறும் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து மறுநாள் சனிக்கிழமை மொனராகலையில் சுதந்திரக் கட்சி தலைமை யிலான கூட்டணியின் இரண் டாவது மாநாடு நடைபெறவிருக்கின்றது. அம்பாலாங்கொடையில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் இருபதுக்கும் அதிகமான எம். பிக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் மொனராகலையில் நடக்கும் இந்த இரண்டாவது மாநாட்டில் மேலும் சில முக்கிய எம். பிக்கள் மேடையேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான இந்தக் கூட் டணியில் ஏற்கனவே, பல முக் கிய தலைவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். பெரும்பாலும் இந்த மொனராகலை மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய எம். பிக்கள் சிலரும் மேடையேறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

டாக்டர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே தனது ஆதரவை வெளிப்படுத்தி விட்டாலும் பகிரங்க மேடை எதிலும் இதுவரை ஏறவில்லை. அவர் பெரும்பாலும் அந்த மாநாட்டில் மேடை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகாலவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களம் இறங்கும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்ற நம் பிக்கையில் காத்திருந்த மற்று மாரு முக்கிய தலைவரான பாட்டாலி சம்பிக்க ரணவக் கவும் மொனராகலை பேரணியில் கலந்துகொள்வார் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது.

ஏதேனும் ஒரு காரணத்தால் ரணில் போட்டியிலிருந்து ஒதுங்கினால், பொதுவேட் பாளராக களம் இறங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர் சம்பிக்க. இப்போது ரணில் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில், அவரும் ரணிலுடன் இணைந்து அவரின் வெற்றிக்கு உழைக்க முடி வெடுத்துவிட்டாரெனக் கூறப் படுகின்றது. இதேவேளை, வடக்கு – கிழக்கில் தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிகரமசிங்க, கடைசியாக மட்டக்களப்பு மாவட் டத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதோடு, அங்குள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் அனைவரையுமே தனித்தனியாக சந்தித்திருக்கிறார்.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவானவர் கள் என்ற பட்டியலுக்கு வெளியே இருக்கும் அனைத் துத் தரப்பினரையும் தனித்த னியாக தேடிச்சென்று சந்தித் துள்ள ரணில், காத்தான்குடி யில் ஹிஸ்புல்லா முதல் கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், சாணக்கியன் என்று அனைவ ரையும் இந்தப் பயணத்தில் சந்தித்திருப்பது கவனிக்கத்தக் கது. தேர்தல் களம் களைகட்டத் தொடங்கிவிட்டது என்று தெரிகின்றது. இனி என்ன… தினமும் ஒரு திருப்பத்துடன் நாட்கள் நகரலாம்.

ஊர்க்குருவி.