தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை காலி பண்ணுவதென்று சிலர் முடிவெடுத்து விட்டனரென்றே தெரிகின்றது.
அண்மையில், அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர் களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், “கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன், தனது பதவியிலிருந்து
விலகவேண்டும்”, என்று உள்@ர் தொலைக்காட்சி ஒன் றுக்கு பேட்டியளிக்கப் போய், அந்த விடயம் இப்போது கட்சிக்குள் பூதாகாரமாக வெடித்திருக்கின்றது.
இப்படியொரு நிலை வரும் என்று தெரியாமல் செல் வம் இவ்வாறு தெரிவித்திருக்க முடியாது. சிலவேளை அவரே இப்படியொரு நிலை வரவேண்டும் என்பதற்கா
கவே செய்தாரோ தெரியவில்லை. எழுந்து நடமாட முடியாதிருக்கின்ற சம்பந்தன், கட்சித் தலைமைப் பொறுப் பிலிருந்து விலகவேண்டும் என்றும் ஆகக் குறைந்தது
பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்தாவது விலகவேண்டும் என்றும் ‘ஈழநாடு”வும் அண்மையில் தலையங்கம் தீட்டியிருந்தது.
பாராளுமன்றத்திற்கே செல்லமுடியாத அளவுக்கு இருக் கின்ற ஒருவர் தொடர்ந்து பாராளுமன்றக் குழுத் தலைவ ராக தொடர்வது எந்த வகையிலும் பொருத்தமாக இருக் காது என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கின்ற நிலையிலேயே செல்வமும் அதனை தெரிவித்தி ருக்கிறார்.
ஆனால், அதனால் ஆத்திரமடைந்துள்ள தலைவர் சம் பந்தன், அதற்குப் பழிதீர்க்கும் வகையில் சில நடவடிக்கை களை ஆரம்பித்திருக்கிறாரென, கூட்டமைப்பு உள்வீட்டு
தகவல்களை விலாவாரியாக தருகின்ற ஓர் ஊடகர் வெளி யிட்டிருக்கிறார்.
பாராளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க முடிவெடுத்ததும், இதனையடுத்து கூட்டமைப்பின் சில
தலைவர்கள் ரணிலை சந்தித்தனரெனவும் சமூகவலைத் தளங்களில் உலாவிய அநாமதேய ‘குசும்பு”களைப் பற்றிய தகவல்களையே சம்பந்தன் தரப்பு சேகரித்து வருவதாகவே அந்த ஊடகர் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற குசும்பு செய்திகளை உண்மை என்று நம்பகின்ற அளவுக்கு சம்பந்தன் விபரம் அறியாத ஆள் அல்ல.
இந்தக் குசும்பு செய்திகளை ஒரு குறிப்பிட்ட சமூக வலைக்குழுவே திட்டமிட்டு பகிர்ந்து வருவதும் அந்த குழு ஏற்கனவே சில எம். பிக்களை பிரதமர் ‘றேஞ்சு’க்கு
உயர்த்தி பரபரப்பை ஏற்படுத்தியதும் இரகசியமானதல்ல.
இப்போது, செல்வமும் வேறு சிலரும் ரணிலிடம் பணம் பெற்றார்கள் என்றும் அதுபற்றிய தகவல்களையே – அதாவது அந்த குசும்பு செய்திகளையே இப்போது
சம்பந்தன் தரப்பு செல்வத்துக்கு எதிராக திரட்டி வருவ தாகவும், சம்பந்தனுக்கு இந்த விடயத்தில் வேறு சில தரப்புக்களும் உதவி வருவதாகவுமே அந்த ஊடகர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
இப்போது, சம்பந்தன் எப்படி செல்வத்திற்கு எதிரான தகவல்களை திரட்டுகின்றாரோ அதேபோல மற்றுமொரு தரப்பும், கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பி
னர்கள் சீன தூதரகத்துக்கு இரகசியமாக விஜயம் செய்தது ஏன் என்பது குறித்தும், அங்கு நடந்த ‘டீல்”களின் பிரதி பலனாகவே கூட்டமைப்பு, டலஸ் அழகப்பெருமவை
ஆதரிக்க முடிவெடுத்ததா என்ற கோணத்திலும் சில தக வல்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றராம்.
சீனத் தூதரகத்தில், கூட்டமைப்பின் இரண்டு எம். பிக்கள் நடத்திய இரகசிய சந்திப்பு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது என்று நம்பும் அந்தத் தரப்பினர், அவ்வாறெனில் அந்த சந்திப்பு பற்றி மற்றைய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும், இவை இரகசியமாக வைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டிவருவதாக தெரியவருகின்றது.
அவர் பணம் பெற்றார் என்றும், இவர் பணம் பெற்றார் என்றும் எழுதிவிடலாம் அல்லது சொல்லிவிடலாம். ஆனால், அவற்றை எவராலும் எந்தக் கட்டத்திலும் நிரூ பிக்கமுடியாது.
அதிகம் ஏன், பணம் பெற்றவர்கள் என்று சொல்லப் படுகின்றவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதையே கண்டுபிடிக்க முடியாது. இந்நிலையில், அவ்வாறு அடுத்த கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு கூட்டத்தில் பேசப்பட்டால் இதுபோன்ற பல அநாமதேய வதந்திகள் பல தரப்புக்களாலும் மாறிமாறி முன்வைக்கப்படலாம்.
எது எப்படியோ, நடக்கின்ற சம்பவங்களைப் பார்த் தால், கூட்டமைப்பை காலி பண்ணுவதென்று சிலர் கங் கணம்கட்டி பணியாற்றுவது போலவே தெரிகின்றது.
ஊர்க்குருவி.