சில மாதங்களுக்கு முன்னர் நமது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்திருந்த அந்த விடயத்தை வாச கர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
கூட்டமைப்புக்கும் அப்போதைய ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே நடந்த சந்திப்பில் சில விடயங்கள் உடனடி தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்
பட்டதாக அப்போது கூறப்பட்டது.
பலத்த காத்திருப்புக்களின் பின்னர் நடந்த அந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வுகாண இணக்கம் காணப்
பட்டதாகக் கூறப்பட்டது.
அதிலும் சினிமாப்பட ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் போல, இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற் காக அளவீடுகளைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்று
கூட்ட மைப்பு கேட்க, அப்படியா? இராணுவம் எதற்கா கக் காணி களை எடுக்கிறது? இது எனக்குத் தெரியாதே என்று ஜனா திபதி கேட்டாரெனவும், இந்தச் சந்திப்பு
முடிந்து வெளியே வந்த சுமந்திரனிடம் இராணுவத் தள பதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, விபரம் கேட்டா ரென்றும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன.
இராணுவத் தளபதிக்குக்கூட தெரியாமல் காணிகளை இராணுவத்தினர் அளவீடு செய்கிறார்கள் என்று நாமும் முணுமுணுத்துக்கொண்டோம்.
அதில் சிறப்பு என்னவென்றால், அந்தக் காலத்தில் பல இடங்களில் வடக்கில் கடற்படையினரே காணிகளை சுவீகரிப்பதற்காக காணிகளை அளக்க முயன்றதும் பின்னர் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
அதாவது கடற்படை காணி சுவீகரிப்புக்கு முயன்று கொண்டிருக்க நாம், இராணுவம் முயல்வதாக புகார் கூறி னால் அவர்கள் இப்படித்தான் பதில் செல்லவேண்டியிருக் கும்.
இப்போது அதுவல்ல விடயம், அந்தச் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விடயங்கள் குறித்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதுவிடயமாக அப்போ தைய நீதி அமைச்சர் அலி சப்ரியும் சுமந்திரனும் சந்தித்து பேசி அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்றும் முடி வெடுக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
நமது கெட்ட காலமோ என்னவே, இந்தச் சந்திப்பு நடந்து சில வாரங்களிலேயே ராஜபக்ஷக்களுக்கு எதிராக நாடு கொந்தளித்துப் போனதும், அந்தக் கொந்தளிப்பில்
நாமும் இணைந்து கொண்டதாலும் விடயங்கள் நடக்க வில்லை.
நமது கூட்டமைப்பும் இதனால் தப்பித்துக்கொண்டது.
இப்போது, ரணில் ஜனாதிபதி. அவர் பாராளுமன்றத் தில் தேர்தலைச் சந்தித்தபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க முடிவெடுத்தபோதும், நமது கூட்டமைப்பு இந்த அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் தமது நிபந்தனைகளில் குறிப்பிட்டிருந்தது.
அவர் வென்றிருந்தால், இப்போது நமது கைதிகள் சிலர் விடுதலையாகியிருப்பார்களோ என்னவோ?
ஆனால், அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத் திருந்தவர் நீதியரசர் விக்னேஸ்வரன். தேர்தல் நடப்பதற்கு முன்னதாக ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள், பல நாட்கள் கூடிப்பேசி, சில கோரிக்கைகளை இறுதி செய்திருந்தன. அந்தக் கோரிக்கைகளை வேட்பாளர்கள் அனைவரிடமும் கொடுத்து அதனை ஏற்றுக்கொள்கின்ற வரையே ஆதரிப்
பது என்றும் இந்த ஆறு கட்சிகளும் தீர்மா னித்திருந்தன.
ஆனால், வேட்பாளர்கள் யாரும் அதனைக் கண்டு கொள்ளாததாலோ என்னவே அதனை அப்படியே விட்டு விட்டு வெவ்வேறு முடிவுகளை எடுத்தனர் தலைவர்கள்.
அதிலும் விக்னேஸ்வரன் ஐயாவோ, தான் சில கோரிக் கைகளை ரணிலிடம் விடுத்தாரெனவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதால் அவரை ஆதரிக்க முடிவெடுத்த தாகவும் அறிவித்திருந்தது ஞாபகமிருக்கலாம்.
இப்போது ரணில் வெற்றி பெற்றபின்னர், அவர் ரணி லுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் விடுவிக்கவேண்டிய நாற் பத்தியாறு அரசியல் கைதிகளின் விபரங்களுடன் அவர்
களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இத்தோடு தன் பணி முடிந்துவிட்டது என்று இருந்து விடாமல், உறுதியளித்தவாறு அவர்களை விடுவிக்க விக் னேஸ்வரன் அழுத்தம்கொடுக்கவேண்டும் என்பதே தமிழ்
மக்களின் விருப்பம்.!
- ஊர்க்குருவி.