இப்படியும் நடக்கிறது…!

0
386

கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சாணக்கிய பற்றி, மற்றுமொரு கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பலரின் கவனத்தையும் பெற்றிருக்கின்றன.
இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் சார்பில் சாணக்கிய போட்டியிட்டவர் என்பது இரகசியமானதல்ல.
அது தனது அறியாப் பருவத்தில் தான் செய்த தவறு என்றும், இப்போதுதான் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குச் செய்த கொடு மைகள் பற்றி அறிந்துகொண்டவர் போலவும் அவர் அரசியல் நடத்துவதும் ஒன்றும் இரகசியமானதல்ல.
ஆனால், அவர் இப்போதும் மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர் பில் இருக்கிறார் என்றும், அவருக்கு மகிந்த தரப்பிலிருந்து கிடைத்த செய்தி பற்றியும் சுமந்திரன் அண்மையில் பகிரங்க மேடையில் தெரிவித்திருக்கிறார்.
“நாட்டில் போராட்டம் ஆரம்பமானபோது ராஜபக்ஷ குடும் பத்தில் ஒருவர் கூறினாரென சாணக்கியனுக்கும் எனக்கும் ஒரு செய்தி வந்தது. அவர் என்ன கூறினார். அதாவது, இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதாக
எமக்கு தெரிவித்தார். அந்த திட்டமானது ரணில் விக்கிரமசிங்கவி டம் பதவியை வழங்குவோம். அவர் அதைப் பத்திரமாக வைத் திருந்து எம்மிடம் திருப்பி தருவார். இந்த விடயம் மகிந்த ராஜ பக்ஷ இராஜிநாமா செய்வதற்கு 3 கிழமைக்குள் எமக்கு கிடைத்த தகவல் ஆகும். சாணக்கியனுக்குதான் இந்த விடயம் தெரிவிக்
கப்பட்டது. சாணக்கியனே எனக்கு சொன்னார்.” -இதுவே சுமந்திரன் தெரிவித்த கருத்து.
இந்த வியடம் நமக்கு பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றது.
மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமது மிக அந்தரங்கமான அரசி யல் விடயங்களையும் சாணக்கியனுடன் பகிர்ந்துகொள்ளும் அள வுக்கு அவர் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்.
அப்படியெனில் கூட்டமைப்பு எமது தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் தொடர்பாக நகர்த்தும் இரகசிய விடயங்களையும் அவர் மகிந்த தரப்புக்கு சொல்லுவாரா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மக்களால் நம்பப்படும் சுமந்தி ரன், இதுபோன்ற தகவலை ஏன் பொதுவெளியில் பகிரங்கமாக சொன்னார் என்பது அவருக்கு மாத்திரமே வெளிச்சமானது.
ஆனால், ஒன்று மட்டும் புரிகின்றது, அண்மைக்காலமாக அவர் சற்று குழப்படைந்திருக்கிறார் என்பதே அது. இப்போது, அவர் இவ்வாறு கூறியதல்ல விடயம். அவர் மகிந்த தரப்பின் தகவல் என்று முன்வைத்திருக்கின்ற செய்தியே கவனத்திற்குரியது.
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக வெளிவந்த பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருந்தபோது, மைத்திரியைப் பற்றிய செய்தி களையே படிக்க முடிந்தது.
காலையில் அப்பம் சாப்பிட்டுவிட்டு மாலையில் அங்கே போனார், மோடி ஸ்ரைலில் கோட் போடத் தொடங்கியிருக் கிறார். அவரின் இந்த உடை மாற்றத்தின் பின்னால் சந்திரிகா இருக்கிறார் என்றெல்லாம் அந்தச் செய்திகள் விபரித்தன.
அப்போது மகிந்த என்ற மலையை விழுத்த ஒரு நபர் தேவைப்பட்டார். அது அவரின் அணியிலிருந்தே வந்தது எதிர ணியினருக்கு சுலபமானது. ஆனால், அவர் மகிந்த அணியிலிருந்து வந்தவர் என்பதற்கு அப்பால், அவர் அந்தப் பதவிக்கு பொருத்த
மானவரா? அல்லது ரணில் போன்ற ஒரு தலைவருடன் அவரால் பயணிக்க முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்தித் திருக்கவே இல்லை.
அதனால்தான், ஜனாதிபதியாக வெற்றிபெற்று அந்த ஆசனத் தில் அவரால் அமரமுடிந்தபோதிலும், ரணில் போன்ற ஒருவரு டன் தொடர்ந்து ஒற்றுமையாகப் பயணிக்க அவரால் முடியவில்லை.
மைத்திரி – ரணில் அரசு தத்தமக்குள் மோதிக்கொண்டு இருந்த போது, மகிந்த ராஜபக்ஷ தரப்பு எதிரணியாக மீண்டு எழுந்தது.
அப்போது கோட்டாபய ராஜபக்ஷ, மீதான எதிர்பார்ப்பு மைத் திரியை விட அவர் சிறப்பாக செய்வார் என்றவாறே இருந்தது.
மைத்திரியின் காலத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் கோட்டாபய மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
ஆனால், கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் நாட்டில் தலையெடுக்கும், படுகொலைகள் இடம்பெறும் என்றவாறு பிரசாரம் செய்யப்பட்டது.
ஆனால், நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, கோட்டாபயவால் முடியாதபோது, அவரின் அரசியல் அனுபவமின்மை வெளித்தெரிய தொடங்கியது.
கோட்டாபயவே சொன்னதுபோல ஒரு தோல்வியடைந்த தலைவராக அவர் வெளித்தெரிந்தபோது, மைத்திரி பரவாயில்லை என்ற எண்ணப்போக்கு பலருக்கும் தோன்றியது.
இப்போது, கோட்டாபய இல்லை. அவரின் கதிரையில் அமர்ந்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் ஆட் டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
கோட்டாபய ஆட்சிக்கு வந்தால், இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அவையெல்லாம் இப்போது ரணில் ஆட்சிக்கு வந்தபின்னர் நடக்கின்றன. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடக்கும் கைதுகள் இப்போது கோட்டாபய
பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.
மகிந்தர், சாணக்கியனுக்கு சொன்னதுபோல சம்பவங்கள் நடக்கின்றவோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.!

  • ஊர்க்குருவி.