28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காயம்

கேரளாவின் பாலக்காடு நகரில் நடைபெற்ற ‘லியோ’ படத்தின் ப்ரமோஷன் பணிகளின்போது, படத்தின் இயக்குனரும் தற்போதைய நட்சத்திர இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திரைப்படங்கள் வெளியானதும் அவற்றை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒரு உத்தியாக, படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், குறித்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு நேரில் சென்று, ரசிகர்கள் மத்தியில் உரையாற்றுவது தற்போது ஒரு வழக்கமாகி வருகிறது.

அதன்படி, அண்மையில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக, கேரளாவுக்கு விஜயம் செய்திருந்தார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எனினும், நேற்று (24) பாலக்காட்டின் ஒரு திரையரங்குக்குச் சென்றிருந்த அவர், கூட்ட நெரிசலில் சிக்கி, சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தெரியவருகிறது.

இதனால், திட்டமிட்டிருந்த ஏனைய ப்ரமோஷன் பணிகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும், தான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக இயக்குனர் லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles