இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இணைய தேடல் பொறியான கூகுள் பக்கம் தனது முகப்பில் கறுப்பு நிற எழுத்துக்களால் கூகுள் பெயர் காட்சியளிக்கின்றது.