86 ஆவது வருடாந்த இரண்டு மைல் நீச்சல் போட்டிகள் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கல்கிசை கடலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளீருக்கான பகிரங்க நீச்சல் போட்டிகளும் 15 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டிகளும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
ஆண்களுக்கான பகிரங்க நீச்சல் போட்டி 9 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளில் பங்குகொள்ளும் வெளிநாட்டவர்கள் குறைந்தது இலங்கையில் இரண்டு வருடங்கள் வசித்திருக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.போட்டிகள் நடைபெறும் இரண்டு நாட்களிலும் போட்டியாளர்கள் தங்களது பயிற்சி நடவடிக்கைகளைக் காலை 7 மணிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.