பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தீர்வு கோரி இலங்கை கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்திருந்தது . இந்நிலையில், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இன்று முதல் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இரவு நேர முறைமைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.