இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது!

0
87

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கும், திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் வரும் இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தளாய், அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.