வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பிரதேச அபிவிருத்தி குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின், ஆணைமடு, நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வெள பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு, பியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு, நேற்று, அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில், கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.