பயங்கரவாதத்தை தோற்கடிக்க இராணுவம் பயன்படுத்திய உத்திகள் பாதுகாக்கப்படவேண்டும் என கூட்டுப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கண்டிக்கு சென்ற அவர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொடை ஸ்ரீ விஜிதசிறீ தேரருடன் உரையாடினார்.
இறுதிப்போர் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இறுதிப் போரின் போது சில சமயங்களில் 100 மீற்றர்கூட எம்மால் நகர முடியவில்லை.
அதனால் நாங்கள் சுயமாக உருவாக்கிய உத்திகளைப் பயன்படுத்தி போர் களத்தை மாற்றினோம்’ என சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இறுதிப் போரில் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக சவேந்திர சில்வா செயல்பட்டிருந்தார் என்பதும், மனித உரிமைகள் மீறல், போர் குற்றங்கள் மற்றும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தரப்பால் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.