இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

0
135

மியான்மாரில் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகின்றது.

இந்த நிலையில், அந்த நாட்டின் சாஜைங் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான அமைப்பினர் தங்கியிருந்த பகுதி மீது, இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.