இருளில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

0
127
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜப்பானின் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய “கல்யாணி” பாலத்தின் கொங்கிறீட் வாயிலில் இருந்து செப்பு கம்பிகள் அகற்றப்பட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கேபிள்களை அகற்றியதில் 286 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.