கடந்த 7,8 ஆம் திகதிகளில் அதிவேக வீதிகளில் சுமார் ஒரு இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளன என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7ஆம் திகதி 50,790 வாகனங்களும் 8ஆம் திகதி 47,000 வாகனங்களும் பயணித்துள்ளன என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு தினங்களிலும் வாகனப் போக்குவரத்தினூடாக 25 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும் பயணக்காட்டுப்பாடு அமுலிலுள்ளக் காலப்பகுதியில் அதிவேக வீதிகளில் வாகனப் போக்குவரத்து 60 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக அதிவேக வீதிகள் செயற்பாடு, பராமரிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் பொறியிலாளர் நிஹால் லொட்விக் தெரிவித்துள்ளார்.
சாதாரண நாட்களில் அதிவேக வீதிகளினூடாக 25 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணக்காட்டுப்பாடு அமுலிலுள்ளக் காலப்பகுதியில் அம்பியுலன்ஸ், அத்தியாவசியத் தேவைக்காகப் பயணிக்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.