கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க கடலோர படையினர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் இருந்தனர்.
இந்த நிலையில், ஜூன் 28 ஆம் திகதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீருக்கடியில் சென்ற பயணத்தின் போது வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.