26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கு 4 PCR பரிசோதனை இயந்திரங்களை வழங்கிய அவுஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களை இலங்கை கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வகுத்துள்ள ஒருங்கிணைந்த பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக, கடற்படை கடல் மண்டலத்தில் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளின் போது கடற்படைக்குத் தேவையான திறமையான மற்றும் பயனுள்ள பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதுக்காக இந்த பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சீ.ஆர் இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, இந்த பி.சீ.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் கொமடோர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உள்துறை விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹசன் சோவைட் மற்றும் கடற்படை மருத்துவ சேவைகள் இயக்குநர் (நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles