இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதி உதவி: உலக வங்கி இணக்கம்

0
162
World Bank on glass building. Mirrored sky and city modern facade. Global capital, business, finance, economy, banking and money concept 3D rendering animation.

இலங்கைக்கு சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த வருட இறுதிக்குள் இந்த நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், உலக வங்கியின் நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளைச் சாதகமான முறைமையின் கீழ் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டு வந்தது.