இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்தில் ‘வாய்வழி சுகாதாரப் பிரிவு’ நேற்றைய தினம் திறந்து
வைக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைந்து பல்வேறு செயற்றிட்டங்கள் கருத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன.
கடந்த ஆறு மாத காலமாக பேசப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வாய் சுகாதார மேம்பாட்டுப்பிரிவு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் பணிமனையின் பிரிவுகளினால் மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்திற்கான விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்வதென்ற இருதரப்பு ஒப்பந்தமும்
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பல் மருத்துவப் பிரிவின் ஆரம்ப நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ.வாஜித்,
திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர், கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக், தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், பதிவாளர், பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.