இலங்கையின் பிரபல கலைஞர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு ஆதரவு!

0
85

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தாம் அதரவளிப்பதாக, இலங்கையின் பிரபல கலைஞர்கள் அறிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபல கலைஞர்கள் இதனைத் தெரிவித்தனர்.

நாட்டில் பல சமயங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் கலைத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டங்களினால் நாட்டின் கலைத்துறை நல்ல நிலைக்குத் திரும்பியதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

கலைத்துறைக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தைப் பெற்றுத் தரும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.