இலங்கையில் இன்று இதுவரை 657 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு

0
218

நாட்டில் இன்றையதினம் மேலும் 657 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9இ537 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளைஇ இலங்கையில் 14இ285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ அதில் 4இ712 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 493 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் இதுவரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.