Home உள்நாட்டு இலங்கையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று

0
இலங்கையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 227 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் மாத்திரம் 510 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக உயர்வடைந்ததுடன் 5 ஆயிரத்து 609 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,285 பேர் இதுவரை குணமடைந்தனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here