இலங்கையில் இரண்டு புதிய அதிக விளைச்சல் தரும் மாதுளை வகைகள் !

0
178
pomegranate with leafs on wooden table
ஒரு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக மகசூலைத் தரும் இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது எனவும், அவர்களின் முயற்சிகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.அதிக மகசூல் மற்றும் மிகவும் இனிப்புடன் கூடிய இவ்விரு ரகங்களும் அடுத்த சில மாதங்களில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பெருமளவிலான மாதுளை மற்றும் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், ஆண்டுதோறும் பெருமளவு அன்னியச் செலாவணியை அரசு இழக்கிறது.இந்நிலைமையை தவிர்க்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் இரண்டு புதிய மாதுளை ரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.உலர் வலயங்களில் பயிரிடக்கூடிய இந்த இரண்டு புதிய இரகங்களும் தற்போது நுரைச்சோலை மற்றும் வீரவில விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளில் பயிரிடப்பட்டு வெற்றியடைந்துள்ளன.