இலங்கையில் DigiLockerஐ அறிமுகப்படுத்த திட்டம்!

0
5

எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற பிம்ஸ்டெக் டிஜிட்டல்  மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அனைவருக்கும் செழிப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் பிம்ஸ்டெக் டிஜிட்டல் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் குழு கலந்து கொண்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அரச அபிவிருத்தி ஆகிய தலைப்புகள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் DigiLocker செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. UPI செயல்முறையையும் விரிவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“டிஜிட்டல் கட்டண முறையாக GovPay ஐ அறிமுகப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்றார்.