பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான PROVENCE என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கடற்படை மரபுகளுக்கமைய கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த DESTROYER ரக PROVENCE என்ற போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது. கப்பலின் கட்டளை அதிகாரியாக CAPTAIN LIONEL SIEGFRIED பணியாற்றுகின்றார். இந்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.