இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

0
60
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 18 முதல் 22 வரையிலும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 26 முதல் 30 வரையிலும் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் தலைவராக டிம் சவுத்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி வீரர்களின் விபரம்டிம் சவுத்தி (தலைவர்), டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), மிட்செல் பிராஸ்வெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை தலைவர்), டேரி மிட்செல், வில் ஓ’ராவ்கி, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.