இருபதுக்கு-20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரகாரம் குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.
Home முக்கிய செய்திகள் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்ய குழு நியமனம்