இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பிடித்த இளம் வீரர்

0
67

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ பயிற்சியின் போது அவரது வலது தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக உயர் செயல்திறன் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் பெர்னாண்டோவுக்குப் பதிலாக 27 வயதான வலது கை சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.