இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும். இதில் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென்னாபிரிக்க அணி முனைப்பு காட்டும் அதேவேளை இந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.