இலங்கை பொருளாதாரம் : ஐ.எம்.எவ்வின் அறிக்கை

0
13

அண்மைய வெளிப்புற அதிர்ச்சி மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சந்திப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, இலங்கையின் நிதிச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.

நிலையான வருவாய் திரட்டல் முயற்சிகள் அவசியமாகும்.

புதிய வரி விலக்குகளைத் தவிர்ப்பது, நிதி வருவாய் கசிவுகளைத் தடுப்பதற்கு உதவும்.

மின்சாரக் கட்டணக் கிரயத்தை ஈடு செய்யும் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.