இலங்கை மகாவலி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் மகாவலி மறுமலர்ச்சி வாரம்

0
46

இலங்கை மகாவலி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் மகாவலி மறுமலர்ச்சி வாரம் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மகாவலி பி வலயத்தில்உள்ள எட்டு பிரிவுகளில் நடைபெறும். இதன் ஆரம்ப விழா வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தலைமையில், மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து நடைபெற்றது.

சேனாசனத்தில் ஐம்பது நாக மரக்கன்றுகளை நட்டதன் பிறகு விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் பங்கேற்புடன், அசுத்தமாக இருந்த இன்ந்த பிச்ச வாவியை சுத்தம் செய்யும் ஒரு சிரமதானமும் நடத்தப்பட்டது. மகாவலி பி வலயத்தின் எட்டு பிரிவுகளிலும் செயல்படுத்தப்படும் இந்த மகாவலி மறுமலர்ச்சி வாரத்தைக் கொண்டாடும் வகையில், இன்று (11) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் தினமாகவும், 12 ஆம் திகதி மத மற்றும் நீர்ப்பாசன முகாமைத்துவ உட்கட்டமைப்பு அபிவிருத்தி; தினமாகவும், 13 ஆம் திகதி சுகாதார மேம்பாடு, காணி முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் மேம்பாட்டு தினமாகவும், 14 ஆம் திகதி தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார தினமாகவும்,பெப்ரவரி 15 ஆம் திகதி மீன்வளம் மற்றும் கால்நடை அபிவிருத்தி தினமாகவும், 16 ஆம் திகதி மாதுரு ஓயா தெற்கு கரை புதிய பகுதியில் வாழ்வாதார அபிவிருத்தி தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாவலி பி வலயத்தின் எட்டு மகாவலி பிரிவுகளிலும் அடுத்த சில நாட்களில் சுமார் 260 திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.