இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த காலங்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
ஆகவே எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறினார். அந்நிய செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளதுடன் வங்கி முறைமையில் அந்நிய செலாவணி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி நாணயச் சபை, தற்போதைய வட்டி வீதங்களை அதே மட்டத்தில் பேணுவதற்குதீர்மானித்துள்ளது. இதன்படி நிலையான வைப்புகளுக்கு 14.5 சதவீதமும், நிலையான கடன்களுக்கு 15.5 சதவீதமும் வட்டி விகிதங்களை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.