அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு பயிற்சி சார்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் அல்லது மாநில அல்லது பிரதேச சங்கத்திற்குள் எந்தப் பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிக்பேஷ் லீக் அணிகள் அடங்கிறது.
கிரிக்கெட் விக்டோரியாவில் பணிபுரிந்த சமரவீர ‘தகாத நடத்தையில்’ ஈடுபட்டதாக நடத்தை ஆணையம் கண்டறிந்தது. மாநில மகளிர் திட்டத்துடன் இணைந்து பணியாற்றிய சமரவீரவை தடை செய்வதற்கான முடிவை ஆதரிப்பதாக விக்டோரியா கிரிக்கெட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.