நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (13) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படிஇ அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 95 சதம்இ விற்பனை பெறுமதி 296 ரூபாய் 97 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 72 சதம், விற்பனை பெறுமதி 380 ரூபா 16 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 33 சதம், விற்பனை பெறுமதி 317 ரூபாய் 19 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 80 சதம் விற்பனை பெறுமதி 339 ரூபாய் 43 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 214 ரூபாய் 11 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபாய் 33 சதம் விற்பனை பெறுமதி 196 ரூபாய் 6 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 49 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபாய் 70 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.