இலங்கை றக்பிக்கு சர்வதேச தடை

0
116

சர்வதேச றக்பி சம்மேளனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை றக்பிக்கு சர்வதேச தடை விதித்துள்ளது.

இலங்கையில் றக்பி விளையாட்டுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக சர்வதேச றக்பி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச றக்பி சம்மேளனம் இந்த தடையை விதித்துள்ளது. 

இதற்கு முன்னர் ஆசிய றக்பி சம்மேளனத்தினாலும் இலங்கை றக்பி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த தடை காலப்பகுதியில் இலங்கை ரக்பி வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

இந்நிலையில், இலங்கையில் கால்பந்தாட்டத்துக்கும்  பீபா  சர்வதேச தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.