இலங்கை வந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரி ஓய்வு!

0
213

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் திணைக்களத் தலைவர் சாங்யோங் ரீ திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்துடன் அவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அனுபவமிக்க பொருளாதார நிபுணரான இவர் தென்கொரியாவின் மத்திய வங்கி ஆளுநராகப் பெயரிடப்பட்டமையைத் தொடர்ந்தே தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இலங்கை வந்த சாங்யோங் ரீ ஜனாதிபதி, நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஐ)