கடலில் நீரில் மூழ்கி டைவிங் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் ஹிக்கடுவ, வெவெல்கொட கடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் மேலும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து நேற்று பிற்பகல் அப்பகுதியில் டைவிங் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.அந்தவேளை, நீரில் மூழ்கும் போது உபாதை ஏற்பட்டதாகவும், உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் 57 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹிக்கடுவ காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.