இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தர்ஷன் தர்மராஜின் வீட்டிற்கு செல்லும் வீதிக்கே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தர்ஷன் தர்மராஜின் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயர் பலகை திறப்பு நிகழ்வு இன்று (27/07/2024) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வில் அரசியல்வாதிகள்இ குடும்ப உறுப்பினர்கள்இ நண்பர்கள்இ பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். அதேவேளை இலங்கையில் தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் முதல் தடவையாக வீதியொன்றிற்கு சூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.