இலங்கை விஜயம் குறித்து மோடி வெளியிட்ட தகவல்

0
16
New Delhi, Jul 23 (ANI): Prime Minister Narendra Modi speaks on the Union Budget 2024, in New Delhi on Tuesday. (ANI Photo)

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள  இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என  தெரிவித்துள்ளார்.