தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற வருமானத்திலிருந்து இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/01/SLBFE-3-1024x573.jpg)
இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3 ஆயிரத்து 382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரே நேரத்தில் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபா காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் காசோலை கையளிக்கப்பட்டுள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/01/SLBFE-2-1024x563.jpg)