இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஐ.நாவிற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி

0
159

மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சென் சூ சந்தித்துள்ளார்.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகால நட்புறவு பாரம்பரியம் இருப்பதாகவும், இலங்கை தற்போது எதிர்நோக்கும் சிரமங்களுக்கு சீனத் தரப்பு கவலையை தெரிவிப்பதாகவும் தூதுவர் சென் சூ இதன்போது குறிப்பிட்டார். மேலும்,
இலங்கையின் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற அபிவிருத்திப் பாதையை தெரிவு செய்வதில் சீனா உறுதியாக ஆதரவளிக்கின்றது எனவும் மனித உரிமைகளில் இலங்கையின் சாதனைகளை சாதகமாக மதிப்பிடுவதாகவும்
அத்தோடு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் சில நாடுகளின் அழுத்தத்தை சீனா உறுதியாக எதிர்க்கின்றது எனவும் சென் சூ குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் உதவிய சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, மனித உரிமைகள் பேரவையில் சீனாவுடனான தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தவும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.