இலஞ்சம் -பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

0
102
10,000 ரூபாவை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரொருவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருணாகல் – நாரம்மல பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்காதிருக்க இந்த இலஞ்ச தொகையை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.குறித்த வீட்டின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், உப பொலிஸ் பரிசோதகரையும் கான்ஸ்டபிளையும் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.