இலவச உர விநியோகம்: வெளியான விசேட அறிவிப்பு

0
62

ஒக்டோபர் மாதத்திற்குள் 55இ000 மெற்றிக் தொன் உரம் நாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் ஊடாக இந்த உரக் களஞ்சியம் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படிஇ எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைகளுக்குத் தேவையான உரம் இந்தப் பருவத்தில் இருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய 1968 ஆம் ஆண்டு முதல்இ உலக உணவுத் திட்டம் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஆதரித்து விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்துகிறது.