நடிகர் விஜய்யை பல வருடங்களாக இளையதளபதி என்று தான் ரசிகர்கள் அழைத்து வந்தனர். அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் தான் தளபதி என்ற பட்டம் முதன் முதலில் வந்தது.
அப்போது இருந்து விஜய்யை தளபதி என அழைத்து தொடங்கினார்கள் ரசிகர்கள். தற்போதும் இது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் மேடையில் மைக் எடுத்து ஓரமாக வைப்பதையும், நடிகர் ஆரி அர்ஜுனன் மேடையில் இருக்கும் சேரை எடுத்து ஓரமாக வைப்பதையும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஆரி தான் இளையதளபதி என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவை ஆரி ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி கூறி இருக்கிறார்.
இளையதளபதி பட்டத்தை ஏற்றுக்கொள்வது போல ஆரி ட்விட் செய்திருப்பதற்கு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.