ஜப்பானிய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கு!

0
166

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச்சடங்கிற்காக அந்நாட்டு அரசாங்கம் செலவிட தீர்மானித்திருக்கும் பெருந்தொகை பணம் அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2007 வரையும், 2012 முதல் 2020 வரையும் ஜப்பானியப் பிரதமராக பதவி வகுத்து ந்த சின்சோ அபே தனது உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளில் மட்டும் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 8ம் திகதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜப்பானின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த சின்சோ அபே கொல்லப்பட்டமையானது உலகத் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த சின்சோ அபேவுக்கு இன்றைய தினம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கிற்கான நிகழ்வுகளை டோக்கியோவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் மறைந்த பிரித்தானியாவின் 2ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கிற்கு செலவிட்டதை விட பன்மடங்கு தொகையை சின்சோ அபேவின் இறுதிச்சடங்கிற்கு செலவிட ஜப்பான் அரசு தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. அந்தவகையில் இலங்கை மதிப்பில் சுமார் 418 கோடி ரூபாவை ஜப்பான் அரசு செலவிட எதிர்பார்த்துள்ளதாக அறிய முடிகிறது. ஏற்கனவே டோக்கியோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர்பார்த்ததை விட 13 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டமை ஜப்பான் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கிற்கு இவ்வளவு தொகை செலவிடப்படுகின்றமை தொடர்பில் பரவலாக கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.