பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 50 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காஸா நகரமான ரபாவின் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.