இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் சுட்டுக்கொலை!

0
13

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டானிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.