29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இஸ்ரேல் காசா:தியாகி சப்ரீன் அல்ஹானியின் குழந்தை

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து  குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் காசாவில் இடம்பெற்றுள்ளது. சபிரீன் என்ற பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில் யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார்.

எனினும்  ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது. சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் குண்டொன்றை வீசினர். சபிரீன் கடும் காயங்களிற்குள்ளானார் அவரது கணவர் கொல்லப்பட்டார் எனினும் மீட்பு பணியாளர்கள் அந்த வீட்டை நெருங்கிய வேளை சிசு தாயின் வயிற்றில் இன்னமும் உயிருடன் இருந்தது.

மீட்பு பணியாளர்கள் சப்ரீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. சப்ரீனை காப்பாற்ற முடியவில்லை ஆனால் குழந்தையை உயிர்ப்பிப்பதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர் சுவாசத்தை தூண்டுவதற்காக அவளின் நெஞ்சில் மெதுவாக தட்டினார்கள் அவளது நுரையீரலிற்குள் காற்றை செலுத்தினர். அவள் மிகக்கடுமையான சுவாசக்கோளாறின் மத்தியில் பிறந்திரு;கின்றாள் என தெரிவிக்கின்றார் ரபாவின் எமிராட்டி மருத்துவமனையின் நியோநட்டல் அவசர பிரிவின் தலைவர் மருத்துவர் முகமட் சலாமா.

எனினும் 1.45 கிலோ உடைய அந்த குழந்தை தான் பிறந்தவேளை எதிர்கொண்ட சோதனைகளில் இருந்து மீண்டுள்ளாள்.தியாகி சப்ரீன் அல்ஹானியின் குழந்தை  என்ற வாசகத்தை ஒரு சிறிய டேப்பில்  எழுதிய மருத்துவர்கள் அதனை அவளது உடலில் ஒட்டினார்கள் பின்னர் அவள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டாள். அவளது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க முடியும் என்கின்றார் மருத்துவர் சலாமா.

ஆனால் நிலைமை இன்னமும்  ஆபத்தானதாக காணப்படுகின்றது உரிய மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்பதால் சுவாசக்கோளாறு நோய் அறிகுறி காணப்படுகின்றது இந்த நாட்களில் குழந்தை தாயின் வயிற்றில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கான அவளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். மேலும் சில மாதங்களிற்கு குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்பின்னர் அவளை மருத்துவமனையிலிருந்து அனுப்புவது குறித்து சிந்திப்போம் இங்கு பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது இந்த குழந்தை உயிர்பிழைத்தாலும் அநாதையே என வைத்தியர் சலாமா தெரிவிக்கின்றார். அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்கு பெற்றோர்கள் எவரும் இல்லை கொல்லப்பட்ட அவளது மூன்று வயது சகோதரி ரூஹ் என பெயரிட விரும்பினால் எனினும் அவளது தாயின் நினைவாக சப்ரீன் என அழைக்கின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles