காசாவின் வடக்கே அமைந்துள்ள கமல் அத்வான் மருத்துவமனைப் பகுதியில், இஸ்ரேல் நடாத்திய வான்வெளித் தாக்குதலில், மருத்துவமனையில், தஞ்சமடைந்திருந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை நாப்லஸ் பகுதியில், வாகனமொன்றில் பயணித்த, பாலஸ்தீன இளைஞர்கள் மீது, இஸ்ரேலின் சிறப்புப் படையினர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.