இஸ்ரேல் தூதரகம்அருகே துப்பாக்கிச் சூடு:ஒருவர் பலி!

0
77

ஜேர்மனியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பதிவாகிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முனிச் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகப் பகுதியில், நபரொருவர் துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். சந்தேக நபரிடம் பொலிஸார விசாரணைகளை முன்னெடுக்க முயன்றபோது, அவர், பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸாரும் பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், சந்தேக நபர், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஜேர்மனிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.