ஈரானின் அணு உலைகளை தாக்குங்கள்- ட்ரம்பின் அறிவிப்பால், சர்வதேசத்தில் எழுந்துள்ள சர்ச்சை

0
70

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வடக்கு கரோலினா மாகாணத்தில்
இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ஈரானில் அணுசக்தி உலைகள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஈரானின் அணு சக்தி நிலைகளை தவிர்த்து பிற இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து வெளியிட்ட நிலையில்,அதற்குப் பதலளிக்கும் வகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.